சாக்கடையும் துர்நாற்றமும்

Update: 2022-07-26 15:29 GMT

சென்னை நொளம்பூர் பாலத்திற்கு கீழே சாக்கடை நீர் ஓடுகிறது. தினமும் அதிகமான மக்கள் இந்த பாலத்தை கடந்து செல்கிறார்கள். ஆனால் இந்த பாலத்தின் இரண்டு புரமும் தடுப்பு இல்லாமல் உள்ளது. மேலும் சாலையும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்துடனே பயணம் செய்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்