மழைநீர் தேக்கம்

Update: 2022-07-26 15:26 GMT

சென்னை அம்பத்தூர் திருமுல்லைவாயல் தென்றல் நகர் கிழக்கு பகுதி 19-வது தெருவில் பராமரிக்கப்படாமல் இருந்து வரும் இடத்தில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதில் துர்நாற்றம் வீசி கொசு மற்றும் புழுக்கள் உருவாகி தொற்று நோய்கள் ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூடி மழை நீர் தேங்காத அளவுக்கு சரி செய்ய வேண்டும். மேலும் மழை நீர் வடிகால் அமைத்து மழைநீர் நிரந்தரமாக தேங்காத அளவுக்கு வழி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்