காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் பகுதியில் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து தாம்பரம் செல்லும் சாலையில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அதற்காக சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. வெட்டப்பட்டு வரும் மரங்கள் சாலையின் நடுவில் விழுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் சாலையில் இருப்பக்கத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், பள்ளி வாகனங்கள், பொதுமக்கள் சாலையை கடக்க நீண்ட நேரம் ஆகிறது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமலும் எச்சரிக்கை பலகை வைத்தும் மரங்களை அகற்றும் பணி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.