மாடம்பாக்கம் சிவன் கோவிலிலிருந்துகுரோம்பேட்டை ரெயிலடிக்கு S 3 ,S 10 என்ற மினி பஸ்கள் இருவேறு மார்க்கங்களில் சென்று கொண்டிருந்தன. மற்றும் A 5 மினி பஸ் பாலாஜி நகரிலிருந்து தியாகராய நகருக்கு சென்று கொண்டிருந்தது. இவை கொரானா காலத்தில் திடீரென்று நிறுத்தப்பட்டன. இதனால் இந்த பகுதி மக்கள் மேற்கூறிய இடங்களுக்கு செல்ல சிரமப்படுகிறார்கள். மேலும் பல்வேறு பெரிய குடியிருப்புகளை கடந்து செல்லும் இந்த தடங்களில் மீண்டும் மினி பஸ் சேவையைத் தொடர வேண்டுகிறோம்.