செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ரெயில் நிலையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சிக்னலில் உள்ள சாலையை கடப்பதற்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சிக்னல் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும் என்று பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.