சென்னை அமைந்தகரை மஞ்சகொல்லைத் தெருவில் அமைந்துள்ள பள்ளிக்கூடம் எதிரில் மழைநீர் வடிகால்வாய் அமைந்துள்ளது. இந்த சாலையில் கனரக வாகனங்கள் அதிகமாக செல்வதால் இந்த வடிகால்வாய் சேதம் அடைந்து ஆபத்தான வகையில் காட்சியளிக்கிறது. எந்த நேரத்திலும் குழந்தைகள் பள்ளத்தில் விழும் அபாயமும் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு இந்த கால்வாயை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.