ரேஷன் கடையில் அலைக்கழிக்கப்படும் மக்கள்

Update: 2022-07-25 14:46 GMT

சென்னை புழல் சூரப்பட்டு மேட்டூர் ரேஷன் கடையில்(கடை எண் - 02IF067NT )அரிசி இல்லை என்று சொல்கிறார்கள். இதற்கு கேள்வி கேட்டால் ஏற்கனவே பணியில் இருந்த ஊழியர் அரிசிகள் அனைத்தையும் கார்டுகளுக்கு வழங்கிவிட்டார் என்று கூறுகிறார்கள். இதில் மீதமுள்ள பொருட்களை வாங்கி கொள்ளலாம் என நினைத்தால், கடையை திறந்துவிட்டு ஊழியர்களும் உள்ளே இருப்பது இல்லை. அதற்கு பதிலாக சூப்பர்வைசரை ஒவ்வொரு கடைக்கும் அழைத்து செல்லும் வேலை இருக்கிறது என்று சொல்கிறார்கள். இதனால் பொதுமக்கள் தினமும் அலைக்கழிக்கப்பட்டு, மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே, இது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்