காஞ்சீபுரத்தில் வணிக நிறுவனங்கள் நிறைந்த சாலையாக விளங்கும் காந்தி சாலையில் குடிநீர் குழாய்களில் பழுது ஏற்பட்டது. குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட பழுதை மாநகராட்சி ஊழியர்கள் பள்ளம் தோண்டி சரி செய்தனர். ஆனால் பள்ளம் தோண்டப்பட்ட இடத்தை சரி செய்யாமலே விட்டு விட்டனர். இதனால் இந்த இடத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சூழல் அமைகிறது. எனவே பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.