செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இந்த உயிரியல் பூங்கா நுழைவுவாயில் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. இதனால் வெயில் மற்றும் மழை காலங்களில் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே வண்டலூர் உயிரியல் பூங்கா பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நிழற்குடை வேண்டி விண்ணப்பம்