சென்னை கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலையில் அதிகப்படியான தெருநாய்கள் சுற்றி வருகிறது. இதனால் தெருவில் நடந்து செல்லும் குழந்தைகள், பெரியோர்கள், பொதுமக்கள் என பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் பயத்தில் வேகமாகச் சென்று தவறி விழுந்து விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி தெரு நாய்களை பிடிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.