சென்னை கோடம்பாக்கம் காமராஜ் காலனி 7-வது தெருவில் உள்ள அடி பம்பு சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் அடி பம்பை பயன்படுத்தவே முடியாத சூழல் ஏற்படுகிறது. எங்கள் பகுதி மக்கள் தண்ணீர் எடுக்க நீண்ட தூரம் பயணம் செய்யும் அவலமும் அரங்கேறுகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் ஆய்வு செய்து பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.தீர்வு வேண்டும்