காஞ்சீபுரம் மாவட்டம் ஓரிக்கை தேனம்பாக்கம் பகுதியில் உள்ள கால்வாயில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்றுக்கும் வழிவகுக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.