செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப் பெருமாள் கோவில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஒட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இரவு நேரத்தில் கால்நடைகள் விபத்தில் சிக்குவது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. எனவே பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் நலன் கருதி இந்த பிரச்சினையை விரைவில் சரி செய்ய வேண்டும்.