சென்னை பெரம்பூர் சின்னக்குழந்தை தெரு 1-வது பகுதியில் குடிநீர் வசதிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. நீண்ட நாட்களாகியும் இந்த பள்ளம் மூடப்படாமலே இருக்கிறது. இத்னால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி பள்ளத்தை மூட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.