சென்னை மாதவரம் சூரப்பட்டு பகுதியில் உள்ள ரேஷன் கடை பழுதடைந்து இடிந்து விழும் சூழலில் உள்ளது. இந்த கடையின் கட்டிடம் பழமையான கட்டிடமாக உள்ளதால் மழை பெய்யும் பொழுது கடையில் உள்ள அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்கள் நனைந்து நாசமடைகின்றன. இதனால் பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் வழங்க இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே இந்த கட்டிடத்தை உடனடியாக சீர் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?