செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டில் உள்ள பிரியா நகர் விரிவு, காந்தி தெருவில் உள்ள மின்கம்பத்தின் மேல் பகுதியில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பி வெளியே தெரிகிறது. மின்கம்பம் சாயும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் உள்ளனர். எனவே மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.