செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் படவட்டம்மன் கோயில் முதல் தெரு, அந்த தெருவின் மின் கம்பம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.மின் கம்பத்தின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்து கான்கிரீட் கற்கள் உடைந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலை உள்ளதால், மின் வாரிய நிர்வாகம் விரைந்து செயல்பட்டு, சேதமடைந்த மின் கம்பத்தை புதியதாக மாற்றிட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.