செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூர் நெடுச்சாலை இரும்புலியூர் பஸ் நிறுத்தத்தில் மின்விளக்குகள் இல்லாமல் உள்ளது. இதனால் பஸ் நிறுத்தமே இருள் சூழ்ந்து காணப்படுவதால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சமூகவிரோத செயல்களும் நடைபெறுகிறது. எனவே மின் வாரிய துறை அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தில் மின்விளக்கு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொள்கிறோம்.