நேரத்திற்கு பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-03-15 14:12 GMT


 மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவிலுக்கு மயிலாடுதுறையில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் காலை மற்றும் மாலை நேரங்களில் சரியான நேரத்திற்கு வருவதில்லை. இதனால் பயணிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.ஆகையால் சரியான நேரத்திற்கு பஸ் இயக்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்கள், திருமணஞ்சேரி

மேலும் செய்திகள்