சென்னை எழும்பூர், எத்திராஜ் சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி குளம் போல காட்சியளிகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கல்லூரி அருகே இருப்பதால் கல்லூரி செல்லும் மாணவிகள் மூக்கை பொத்திக்கொண்டு செல்கின்றனர். இவை சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே கழிவுநீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.