தேங்கும் கழிவுநீர்

Update: 2023-02-22 13:52 GMT

சென்னை விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் திறந்த நிலையில் உள்ள 3 கழிவு நீர் கால்வாயிலும் கழிவு நீர் நிரம்பி, வழிந்து ஓடுகிறது. அந்த கழிவுநீர் சாலையில் தேங்கியும் நிற்கின்றன. அந்த சாலை வழியே 2 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளிக்கூடம் இருப்பதால் மாணவ, மாணவிகள் நடந்து செல்ல சிரமமாக உள்ளது. தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்த பிரச்சினையை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்