சென்னை அடையாறு 170-வது வார்டு களிக்குன்றம் பிரதான சாலையில் மின் இணைப்பு பெட்டி ஒன்று உள்ளது. இந்த மின் இணைப்பு பெட்டி ஆபத்தான நிலையில் இருப்பதால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையில் பயணம் செய்யவே அச்சப்படுகின்றனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு மின் இணைப்பு பெட்டியை அகற்றி சாலை ஓரம் வைப்பதற்கு மின்சார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.