சென்னை புதுப்பேட்டை, பாஷா சாகிப் தெருவில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய்த்தொற்று ஏற்படுமோ! என்று அப்பகுதியினர் அச்சப்படுகின்றனர். மேலும் சுகாதார சீர்க்கேடு ஏற்படவும் வழி வகுக்கிறது. இந்த பிரச்சினைக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.