சென்னை ராயபுரம் பண்டிதர் கொள்ளாபுரிநகர் மெயின் தெருவில் கடந்த பல மாதங்களாகவே மின் இணைப்பு கேபிள்கள் பூமியின் மேல் பகுதியில் தெரியும் படி அபாயகரமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவித அச்சத்துடன் தான் அந்த பாதையில் சென்று வருகிறார்கள். மின்சார வாரியம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமா?