சென்னை மணலி ஏ.எப். கார்டன் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இந்த கால்வாயானது நடைபாதையில் உள்ளதால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பாதசாரிகள் தவறி விழுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. திறந்த நிலையில் இருக்கும் இந்த கால்வாயை மூடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.