சுகாதார சீர்கேடு

Update: 2023-01-29 13:51 GMT

சென்னை புளியந்தோப்பு குட்டி தாம்பிரான் தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பள்ளி அருகே இருப்பதால் மாணவ, மாணவிகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கழிவு நீர் அடைப்பை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்