எரியாத மின் விளக்குகள்

Update: 2023-01-29 13:50 GMT

சென்னை ஆவடி திருமுல்லைவாயில் எம்.பி.ஏ.சர்ச் சாலையில் உள்ள மின் விளக்கு நீண்ட நாட்களாக எரியாமல் இருக்கிறது. இதனால் மாலை நேரத்தில் கூட அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு நேரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். மேலும் சமூக விரோத செயல்கள் நடப்பதற்கும் வழி வகுக்கிறது. எனவே மின்சார துறை அதிகாரிகள் மின் விளக்கை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்