காஞ்சீபுரம் மாவட்டம், மின்நகர் 3-வது தெருவில் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் மழைநீர் தேங்கி வருவதால் அந்த பகுதியே குளம் போல் காட்சியளிக்கிறது.மேலும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. நோய் தொற்று ஏற்படும் முன்பு குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.