செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே, நல்லுார் கிராமத்தில் உள்ள மயானம் அருகே உள்ள மின் கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. இப்பகுதியிலுள்ள வீடுகளின் மின் இணைப்புக்கான கம்பிகள், இந்த கம்பம் வழியாக தான் செல்கின்றன. இந்த கம்பத்தின் பெரும் பகுதி சேதமடைந்து, முறிந்து விழும் நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் இந்த மின்கம்பம் கீழே விழுந்து விபத்து ஏற்படலாம். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்.