சென்னை அடையாறு காமராஜ் அவென்யூ 1-வது தெரு மற்றும் கனல் பேங்க் சாலை இணையும் இடத்தில் கடந்த 7 மாதங்களாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை விரைந்து முடிக்காமல் தாமதப்படுத்தி வருகின்றனர். இதனால பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், பொதுமக்களும் கடும் அவதிப்படுகின்றனர். இது சுகாதார சீர்கேடு மற்றும் நோய் தொற்று பரவும் சூழலையும் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.