பம்மல் கிருஷ்ணா நகர் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள மின் விளக்குகள் நீண்ட நாட்களாக எரியாமல் இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் தெரு முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. தெருவில் நடந்து செல்லும் மக்களை நாய் துரத்தி சென்று அச்சுறுத்தும் சம்பவங்களும் அரங்கேறுகிறது. மேலும் நகை பறிப்பு, திருட்டு உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடப்பதற்கும் வழி வகுக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் மின் விளக்கை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.