சென்னை ஆதம்பாக்கம் என்.ஜி.ஓ. காலனி பூங்காவில் மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் பூங்காவில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் குழந்தைகள் பூங்காவில் விளையாடும் போது ஆபத்து ஏற்படுமோ என்று பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். மேலும் முதியவர்கள் நடைபயிற்சி செய்யும் போது தவறி விழும் வாய்ப்பும் உள்ளது. எனவே மின்சாரத்துறை அதிகாரிகள் மின் விளக்கை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.