சென்னை சூளைமேடு ஆண்டவர் தெருவில் பல மாதங்களாக தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அந்த வழியாக நடந்து செல்லக்கூட அச்சப்படுகின்றனர். மேலும் வழிப்பறி, நகை திருட்டு உள்ளிட்ட சமூக விரோத செயல்களும் அரங்கேறுகிறது. இதனை கருத்தில் சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் புதிய தெரு விளக்குகள் அமைக்க வழி செய்ய வேண்டும்