சென்னை ஈ.வெ.ரா பெரியார் சாலை தெற்கு ரெயில்வே அலுவலகம் அருகே இருக்கும் மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் அபாயகரமாக காட்சியளிக்கிறது. மேலும் மின் வயர்கள் வெளியே தெரியும்படி இருப்பதால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அச்சம் அடைகின்றனர். பெரும் விபத்து ஏதும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட மின்சாரத் துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்