சென்னை கன்னிகாபுரம் வி.பி.என். காலனி மெயின் ரோடு அருகே உள்ள மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் சாய்ந்தபடி காணப்படுகிறது. மேலும் மின்சார வயர்கள் வெளியே தெரியும்படி ஆபத்தான வகையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் மின் இணைப்பு பெட்டி கீழே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே மின் இணைப்பு பெட்டியை சரி செய்ய சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.