செங்கல்பட்டு மாவட்டம், மேடவாக்கம் பகுதி ஜே.கே.அவென்யூ குடியிருப்பு பகுதிகளில் தெரு விளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பெண்கள் மற்றும் முதியவர்கள் இரவு நேரங்களில் வெளியே செல்லக் கூட அச்சப்படுகின்றனர். எனவே மின்வாரியத் துறை அதிகாரிகள் தெரு விளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.