சென்னை மதுரவாயில் ஸ்ரீ லட்சுமி நகர் பகுதியில் உள்ள மின்கம்பம் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. மின்கம்பத்தின் அடிப் பகுதியில் சிமெண்ட்டு புச்சுகள் கறைந்து உள்ளே இருக்கும் கம்பிகள் ஆபத்தான வகையில் வெளியே தெரிகிறது. எந்த நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏதும் ஏற்படும் முன்பு மின்கம்பத்தை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.