சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2022-12-21 14:18 GMT

சென்னை வடபழனி வெங்கடேசபுரத்தில் இடுகாட்டுக்கு செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. அங்கு கழிவுநீர் தேங்கி நிற்பதால், அந்த இடத்தை கடந்து செல்லும் போது தூர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்