போரூர் அடுத்த மதனந்தபுரம் பஞ்சாப் வங்கி அருகே உள்ள கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இந்த கால்வாய் நடைபாதையில் உள்ளதால் பாதசாரிகள் இதில் விழுந்துவிட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே திறந்த நிலையில் இருக்கும் கழிவுநீர் கால்வாயை மூடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.