சாய்ந்த நிலையில் மின் இணைப்பு பெட்டி

Update: 2022-12-11 13:56 GMT

சென்னை சிந்தாதரிப்பேட்டை அருணாசலம் தெரு நடைபாதையில் ஆபத்தான முறையில் மின் இணைப்பு பெட்டி சாய்ந்து கிடக்கிறது. எப்போது வேண்டுமானாலும் மின் இணைப்பு பெட்டி கீழே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் மிக அச்சத்துடனே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். பெரும் விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட மின் வாரியத்துறை அதிகாரிகள் மின் இணைப்பு பெட்டியை சரி செய்வார்களா? என்பது அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்