சென்னை அண்ணா நகர் கிழக்கு, சிந்தாமணி சிக்னல் அருகே உள்ள சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. சாலையில் இருக்கும் பள்ளம் கழிவுநீர் தேங்கி பள்ளமே தெரியாதவாறு மறைந்து இருக்கிறது. இதனால் இந்த பகுதியில் பயணிப்பவர்கள் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்படுகிறது. வேலைக்கு செல்லும் மக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பலரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே விரைவில் சாலையை சரி செய்ய வேண்டுகிறோம்.