சென்னை திருவொற்றியூர் கே.சி.பி.ஸ்டாப் காலனியில் உள்ள பிரபல தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பல நாட்களாக கழிவுநீர் தெருக்களில் விடப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெருக்களில் நடந்து செல்லும் போது மூக்கை பொத்திக்கொண்டு தான் நடந்து செல்கின்றனர். துர்நாற்றம் வீசு சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் இருக்கும் இது போன்ற செயல்களை கட்டுப்படுத்த குடிநீர்-கழிவுநீர் வாரியம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.