காஞ்சீபுரம் பேரறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இடத்தில், கழிவுநீர் வெளியேறி ஓடி கொண்டு இருக்கிறது. இதனால் அப்பகுதியில் பெரும் துர்நாற்றம் வீசி வருகிறது. அங்கு பஸ்களுக்காக காத்து கொண்டு இருக்கும் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. பிரச்சனை சரி செய்யப்படுமா ?.