திறக்கப்படாத சமுதாயக்கூடம்

Update: 2022-09-12 14:45 GMT

செங்கல்பட்டு மாவட்டம் ஊனமாஞ்சேரி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சமுதாய கூடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படாமலே உள்ளது, இதனால் ஊனமாஞ்சேரி ஊராட்சியில் உள்ள ஏழை எளிய மக்கள் தங்களது குடும்பத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிளை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கூடத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்