கொளத்தூர் ஜெயந்தி நகர் மா.பொ.சி.தெருவில் மின்சாரம் வாரியா சார்பில் தோண்டப்பட்ட பள்ளம் கடந்த ஒரு வாரத்திற்கு மேல் மூடாமல் இருக்கிறது. இங்கு பாதாள சாக்கடை வசதியும் இல்லாததால் சாக்கடை தண்ணீர் துர்நாற்றத்துடன் பொதுமக்கள் சாலையில் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மின்சார வாரியம் தோண்டிய பள்ளத்தை மூடவும், பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தி தரவும் வேண்டுகிறோம்.