நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-09-11 14:38 GMT

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப் பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி கிராமத்தில் இருந்த பஸ் நிலையமானது 8 வழி சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்டன. இதனால் செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை செல்லும் (தடம் எண் : 500) என்ற டவுன் பஸ்களின் டிரைவர்கள், அவர்கள் விரும்பும் இடத்தில் பஸ்சை நிறுத்திவிடுகின்றனர். இதனால் பயணிகள் ஓடி சென்று ஏறும் நிலை உள்ளது. மேலும் ஒரே நேரத்தில் 3 பஸ்கள் முதல் 5 பஸ்கள் தொடர்ச்சியாக வருவதால் அடுத்துவரும் பயணிகள் சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பயணிகளின் புலம்பல்களுக்கு பதில் கிடைக்குமா?

மேலும் செய்திகள்