தாம்பரம் சேலையூர் பகுதியில் உள்ள க்ரெசன்ட் அவென்யூ தெருவில் இருக்கும் மின் இணைப்பு பெட்டி ஆபத்தான முறையில் திறந்த நிலையில் இருக்கிறது. மேலும் அந்த மின் இணைப்பு பெட்டியை துணியை வைத்து மூடி உள்ளனர். இந்த இடத்தில் மாலை நேரத்தில் சிறுவர்கள் விளையாடி வருவதால் விபத்து ஏற்ப்ட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து திறந்த நிலையில் இருக்கும் மின் இணைப்பு பெட்டியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.