செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கம், செங்குன்றம்-சோத்துப்பாக்கம் சாலை பழுதடைந்து மோசமாக காட்சி தருகிறது. சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருப்பதால், சாலையில் உள்ள குழிகளில் மழை நீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. எனவே அபாயகரமாக காட்சி தரும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கம், செங்குன்றம்-சோத்துப்பாக்கம் சாலை