காஞ்சீபுரம் மாவட்டம் பச்சை வண்ணார் கோவில் வாசலில் குப்பைகள் தேங்கி குப்பைமேடாக காட்சி தருகிறது. சிலர் குப்பைகளை சாலையில் வீசி செல்வதால் அந்த இடமே அலங்கோலமாக காட்சி தருகிறது. எனவே கோவில் அருகே குப்பை தொட்டி வைப்பதற்கும், தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றுவதற்கும் சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.