செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் உட்பட்ட நின்னக்கரை ஏரி கரை மீது அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் நடை பயிற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடைபாதைகளில் சமூகவிரோதிகள் இரவு நேரங்களில் \மது அருந்திவிட்டு அங்கேயே மது பாட்டில்களை உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் நடைப்பயிற்சி ஈடுபடும் பொது மக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் நடைப்பயிற்சி செய்யும் பாதையில் மது அருந்துவதை தடுக்க மறைமலைநகர் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.